தொடர்புக்கு : 9487017993 (
அலுவலகம்)
9360377479 ( ஆலோசனை)
காளான் வளர்ப்பு - நோய் மேலாண்மை
காளான் வளர்ப்பில் மிகவும் முக்கியமான ஒன்று காளானில் ஏற்ப்பட கூடிய நோய் தாக்குதல் ஆகும். இது போன்ற நோய்கள் குடிலின் சுகாதார இன்மையின் காரணமாக ஏற்படுகிறது. காளான் குடிலில் தேவையில்லத நபர்கள் மற்றும் தேவையில்லாத காரணங்களீனால் அடிக்கடி குடில் உள்ளே செல்வதால் நோய் தாக்கப்பட்டு காளான் மகசூல் பாதிக்கப்படும்.
பயிர்களை நோய் மற்றும் பூச்சிகள் தாக்குவது போல காளான்களை பூசணங்கள், பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்கி மகசூல் இழப்பு ஏற்படுத்தும். மேலும் குடிலின் சுற்றுச் சூழல் மாறுபாடுகளின் காரணமாகவும் மகசூல் பாதிப்பு ஏற்படும்
நோய் மற்றும் நோயின் அறிகுறிகள்
- காளான் படுக்கையில் வெண்மை நிறக் காளான் பூசணத்தை தவிர பசுமை நிறத்தில் ஆஸ்பர்ஜில்லஸ், டிரைக்கோடெர்மா, பெனிசிலியம், வெளிர் பச்சை நிறத்தில் கிட்டோமியம், கருமை நிறத்தில் ரைசோபஸ் தோன்றும்.
- சுகாதாரமற்ற முறையில் காளான் படுக்கை தயாரித்தல் மற்றும் குடிலை சரியாக பராமரிக்காததால் இந்நோய் காணப்படும். நோய் காரணிகள் வேகமாக வித்துப் பெருக்கம் செய்து பண்ணை முழுவதும் பரவிவிடும்.